• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் ஜோர்தான் ஹாஷெமைட் இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுதல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கும் ஜோர்தான் ஹாஷெமைட் இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுதல் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்துகொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கிடையில் அரசியல், பொருளாதாரம், கொன்சியூலர், தொழிநுட்பம், விஞ்ஞான மற்றும் கலாச்சார ஒத்துழைப்புகள் அடங்கலாக இருதரப்பு உறவுகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் என்பன இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச வரைவு ஒப்பந்தத்திற்கு சட்டமா உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.