• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்தோனேசியா குடியரசின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவராண்மைக்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் சிக்காக்கோ சமவாயத்தில் கைச்சாத்திட்ட அரசாக இந்நாட்டு வான்பரப்பில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கான விமான நிலைய சேவைகள் / விமான சேவைகள், விமானப் பயணங்கள் பற்றிய தகவல் சேவைகள் மற்றும் அபாய எச்சரிக்கை சேவைகள் வழங்குவதற்கு கட்டுப்பட்டுள்ளதோடு, அதற்கான பொறுப்பினையும் கொண்டுள்ளது. கொழும்பு வான்பறப்பு தகவல் வலயத்தின் தென்கிழக்கு எல்லையை இலங்கை மற்றும் இந்தோனேசியா கூட்டாக பயன்படுத்தி வருகின்ற அயல் நாடுகளாகும். குறித்த வலயத்தில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பொறுப்பு இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் சிக்காக்கோ சமவாயத்தின் பிரகாரம் தேடல் மற்றும் மீட்பு பணிகளின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பினைப் பலப்படுத்துவதற்காக ஆட்புல பூகோளப் பிரதேசத்தில் தேடல் மற்றும் மீட்பு அலகுகளுக்கு உள் வரும் நிபந்தனைகளைக் குறிப்பிட்டு அருகிலுள்ள அரசாங்கங்களினால் அயல் நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது அவசியமாகும். அதற்கிணங்க, இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கும் இந்தோனிசியா குடியரசின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவராண்மைக்கும் இடையில் 05 வருடகாலத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை 2018 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, அதன் காலப்பகுதி தற்போது முடிவடைந்துள்ளது. இருதரப்பினர்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்தும் பேணுவதற்கு இயலுமாகும் வகையில் 2023‑01‑23 ஆம் திகதி தொடக்கம் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை மேலும் 05 வருடங்களுக்கு நீடிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.