• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரிவிடல் வழக்கு சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
- சமகால தேவைகளுக்கு ஏற்ற ஏற்பாடுகளை உள்ளடக்கி பிரிவிடல் வழக்கு சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021‑10‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க வரையப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.