• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்துதல்
- 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகளுக்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவதற்குமான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2020‑12‑21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க வரையப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.