• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நலன்புரி அனுகூலங்கள் செயற்பாட்டிற்காக 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழும் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தின் கீழும் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளு மன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நலன்புரி அனுகூல கொடுப்பனவு (கொடுப்பனவுகளை பெறுவதற்கு தகவுடையவர்களாகவுள்ள ஆட்களை தெரிவு செய்தல்) ஒழுங்குவிதிகள் 2022‑10‑20 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பணிகளையும் நோக்கங்களையும் சரியாகவும் வினைத்திறனுடனும் நிறைவேற்றும் பொருட்டு இலத்திரனியல் அறிக்கைகள் மற்றும் ஆவணங்களைத் தயாரிப்பதற்கும் அதுசார்ந்த தகவல் முறைமையொன்றைப் பேணுவதற்கும் இயலுமாகும் வகையில் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஒன்றிணைந்த நலன்புரி முகாமைத்துவ முறைமை ஒழுங்குவிதிகள் 2022‑11‑29 ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.