• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்
- அக்கிரஹார சுகாதார காப்புறுதிக்குச் சமமான சுகாதார காப்புறுதி காப்பீடொன்றை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்கான பிரேரிப்பொன்று 2023 ஆம்' ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையின் மூலம் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த பிரேரிப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.