• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் கலாசார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் கலாசார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளன. உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.