• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இணைந்த ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுதல்
- 2021 ஆம் ஆண்டில் நிலவிய இலங்கை துருக்கி பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு கூட்டுக் குழுவின் இரண்டாவது கூட்டத் தொடரில் இருதரப்புக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பினை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் துருக்கி வானொலி மற்றும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ள வரைவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கிணங்க குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பொருட்டு பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.