• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சவூதி அரேபிய அரசாங்கத்தின் TAKAMOL கம்பனிக்கும் இலங்கையின் கல்வி அமைச்சின் கீழான மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் திறன் உறுதிப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான உடன்படிக்கை
- கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுடனும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உரிய தரப்பினர்களுடனும் ஒருங்கிணைந்து வௌிநாடுகளிலுள்ள திறன் உறுதிப்படுத்தல் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி இலங்கை திறன் தொழிலாளர்களின் தகைமைகளை வௌிநாடுகளுடன் சமப்படுத்தும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இந்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர் பெறுமதியும், மதிப்பும் கூடிய பொருளாதார நலனுடனும் கூடிய வௌிநாட்டு தொழில்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு பெற்றுக் கொள்ளும் சாத்தியம் உருவாகும். இதற்கிணங்க, சவூதி அரேபியாவின் மனிதவளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சி சேவைகளுக்கான TAKAMOL கம்பனிக்கும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு வரையப்படுள்ள உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கிணங்க உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.