• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை இற்றைப்படுத்துதல்
- தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பிரதான தகவுதிறனாகும் அதேபோன்று நாட்டின் மொத்த பணவீக்கம் தொடர்பில் மிக விரிவான சுட்டெண் ஆகுமென்பதோடு, அதன் முதலாவது தரவு தரத்தின் தொடர்பு ஆண்டு 2013 ஆகும். இலங்கையின் வீட்டு அலகுகளின் தற்போதைய நுகர்வுக்கான செலவினை எடுத்துக் காட்டுவதற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் பொதியில் அடங்கும் பொருட்கள் அதேபோன்று பொருட்கள் மற்றும் சேவைகளின் நிறை தொடர்பு காலப்பகுதி இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள பின்வரும் நடவடிக்கைகள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த நடவடிக்கைகளுக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* அடிப்படை ஆண்டு 2013=100 எனவுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படை ஆண்டை 2021=100 என இற்றைப்படுத்துதல்.

* 2023 சனவரி மாதத்திலிருந்து 21 நாள் கொண்ட கால இடைவௌியில் புதிய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணையும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு தேசிய மட்டத்திலான பணவீக்க வீதத்தை மாதாந்தம் தொகுத்து வௌியிடுதல்.

* இற்றைப்படுத்தப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் சார்பில் 2019 ஆம் ஆண்டின் நுகர்வோர் செலவினை அடிப்படையாகக் கொண்டு நிறை தொடர்பு காலப்பகுதியை மேற்கொள்தல்.

* 2023 சனவரி மாதத்திலிருந்து கொழும்பு மாவட்டத்தின் நகர பிரதேசத்தை தழுவும் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021=100 என்னும் புதிய அடிப்படை ஆண்டு சார்பில் இற்றைப்படுத்தி கொழும்பு மாவட்ட நகர பிரதேச பணவீக்க வீதத்தை கணித்து வௌிப்படுத்தல்.