• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தங்கள்
- 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வருடாந்தம் வரி அறவிடக்கூடிய மொத்த வருமானம் 120 மில்லியன் ரூபாவை விஞ்சும் ஆக்களுக்கு 2.5 சதவீதம் கொண்ட சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டானது விதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வரியிலிருந்து விலக்களிப்புகளானவை சட்டத்தின் முதலாவாது அட்டவணையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் 1989 ஆம் ஆண்டி்ன் 13 ஆம் இலக்க உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உற்பத்தி வரிக்கு உட்படும் மோட்டார் வாகனங்கள் மற்றும் விசேட தேவை உடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் சமூக பாதுகாப்பு உதவு தொகை அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குறித்த சட்டத்திற்கு செய்யப்படவேண்டிய மேலும் சில திருத்தங்கள் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க இந்த சட்டத்தை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.