• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வழக்கு தடயப் பொருட்களின் முகாமைத்துவம் மற்றும் அகற்றலுக்கான பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
- வழக்கு தடயப் பொருட்களின் முகாமைத்துவம் மற்றும் அகற்றலுக்காக நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லாமையினால் விரைவாக அகற்றப்படவேண்டிய சில பொருட்களை தேக்கி வைக்கவேண்டி வருகின்றமையினால் பொருளாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்துவதோடு, இத்தகைய சில பொருட்கள் பயன்படுத்தமுடியாத நிலைக்கு உள்ளாகின்றமையினால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆதலால் வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்னர் நீதிமன்றத்தின் கட்டுக்காப்பிலுள்ள தடயப் பொருட்களை அகற்றுவதற்குரியதான சட்ட ஏற்பாடுகளையும் உரிய நடவடிக்கை முறைகளையும் உள்ளடக்கி புதிய கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பொன்றை சிபாரிசு செய்யும் பொருட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சிபாரிசுகளின் மீது வழக்கு தடயப் பொருட்களின் முகாமைத்துவம் மற்றும் அகற்றலுக்கான புதிய சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கும் இதன் பொருட்டு புதிய சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.