• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமானத்தில் செய்யப்படும் குற்றங்கள் மற்றும் சில பிற நடவடிக்கைகள் சம்பந்தமான சமவாயத்தை திருத்துவதற்கான நெறிமுறைக்கான அணுகுகை (மொன்ரியல் உடன்படிக்கை - 2014)
– விமான பயணத்தின் போது விமானத்தில் செய்யப்படும் குற்றங்கள் மற்றும் சில பிற நடவடிக்கைகள் சம்பந்தமான சமவாயத்தை (மொன்ரியல் உடன்படிக்கை - 2014) திருத்துவது தொடர்பிலான வரைவினை ஏற்றுக்கொள்வதற்கும் குறித்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு சட்டங்களை ஆக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.