• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆராய்ச்சி சேவைகளை வழங்குவதற்காக அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்ளல்
– ஐக்கிய அமெரிக்க குடியரசின் வொசிங்டன் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனமும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகமும் இணைந்து பெனின், பிலிப்பைன்ஸ், தன்சானியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நிலைபேறுடைய போசாக்கு உணவு முறையொன்றுக்காக பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளின் பாவனை தொடர்பிலான ஆராய்ச்சியினை மேற்கொள்ளும் பொருட்டு சர்வதேச கமத்தொழில் ஆராய்ச்சி நிலையத்தின் சமவாய முறைமை அமைப்புடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கையில் பின் அறுவடை முகாமைத்துவம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக தெரிவுசெய்யப்பட்ட ஆராய்ச்சி சேவைகள் சிலவற்றை நடாத்துவதற்கு சிட்னி பல்கலைக்கழத்தினால் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு 11,250 அவுஸ்திரேலிய டொலர்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கும் அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழத்திற்கும் இடையில் உப ஒப்பந்த உடன்படிக்கையொன்றைச் கைச்சாத்திடும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.