• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்மடுல்ல மாவட்ட / நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக காணியொன்றை உடமையாக்கிக் கொள்தல்
– பல்மடுல்ல நீதிமன்றமானது நீதவான் நீதிமன்றமொன்றாகவும் மாவட்ட நீதிமன்றமொன்றாகவும் இயங்குவதோடு, தற்போது 8,385 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குறித்த இந்த நீதிமன்றத்தில் போதுமான இடவசதி இல்லாமையினால் பொதுமக்களும் சட்டத்தரணிகளும் நீதிமன்ற பணியாட்டொகுதியினரும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆதலால், தேவையான வசதிகளுடன்கூடிய புதிய நீதிமன்ற கட்டடத்தொகுதியொன்றை நிர்மாணிக்கும் தேவை எழுந்துள்ளது. இதன் பொருட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் பல்மடுல்லவத்த என்னும் காணியிலிருந்து சுமார் 03 ஏக்கரை ஒதுக்கிக் கொள்வது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த காணித் துண்டை நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.