• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சவூதிஅரேபிய இராச்சிய அரசாங்கத்திற்குமிடையில் செய்யப்படும் உடன்படிக்கை
- வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடைசெய்வதற்குமான இலங்கைக்கும் சவூதிஅரேபிய இராச்சியத்திற்குமிடையிலான உடன்படிக்கை சார்பில் உத்தியோகத்தர் மட்டத்தில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75(3) ஆம் பிரிவின் கீழ் குறித்த உடன்படிக்கையானது முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை பற்றி சட்டமா அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த உடன்படிக்கையில் இராஜதந்திர மட்டத்தில் கைச்சாத்திடுவதற்கும் அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75(1) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த உடன்படிக்கையினை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.