• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU, மி.லீ 0.4 முன்நிரப்பிய ஊசித் தண்டுகள் 800,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- இருதய நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 800,000 Enoxaparin Sodium தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் வழங்குநர்களிடமிருந்து வரையறுக்கப்பட்ட சர்வதேச கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு 4 விலை முன்வைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கிணங்க, கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசுகளின் மீது குறித்த கேள்வியினை M/s. Brawn Laboratories Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.