• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு விமான பயண தகவல் பிராந்தியத்திற்கு மேலாக பறக்கும் சர்வதேச விமானங்கள் சார்பில் அறவிடப்படும் வழிசெலுத்தல் கட்டணங்களைத் திருத்துதல்
- கொழும்பு விமான பயண தகவல் பிராந்தியத்திற்கு மேலாக பறக்கும் சர்வதேச விமானங்கள் சார்பில் அறவிடப்படும் வழிசெலுத்தல் கட்டணங்களை அறவிடுதல் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியினால் மேற்கொள்ளப்படுவதோடு, இந்தக் கட்டணங்கள் 1985 ஆம் ஆண்டின் பின்னர் திருத்தப்படவில்லை. ஆதலால், கொழும்பு விமான பயண தகவல் பிராந்தியத்திற்கு மேலாக பறக்கும் சர்வதேச விமானங்கள் சார்பில் தற்போது அறவிடப்படும் விமான வழி செலுத்தல் கட்டணங்களை 2023‑02‑01 ஆம் திகதி தொடக்கம் செயல்வலுவுக்கு வரத்தக்கதாக திருத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.