• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு இலத்திரனியல் உரிமப்பத்திர முறைமையினை அறிமுகப்படுத்துதல்
- இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் வருடமொன்றில் பொதுவாக சுமார் 17,000 உரிமப்பத்திரங்களை வழங்குகின்றதோடு, இந்த செயற்பாட்டிற்கு ஆகக்குறைந்த தொழினுட்ப பயன்பாட்டின் மீதும் ஆகக்கூடிய மனிதவள பயன்பாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த உரிமப்பத்திரங்களை வழங்கும் செயல்முறையினை வினைத்திறனுடனும் ஆகக்குறைந்த மனிதவள பயன்பாட்டுடனும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழினுட்ப வழிமுறைகளை அறிமுகப்படுத்தும் தேவை தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், இலங்கை முதலீட்டு சபை, தேசிய மருந்துப் பொருள் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை மற்றும் இலங்கை தரங்கள் நிறுவனம் போன்ற குறித்த உரிமப்பத்திரங்களுடன் தொடர்புடைய செயற்பாடுகளுக்கு உரியதாகும் ஒழுங்குறுத்துகை நிறுவனங்களை இணைத்துக் கொண்டு, இந்த செயற்பாட்டினை சுயமாக இயங்கச் செய்வதன் மூலம் வௌிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறமையை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசின் தூதரகத்தின் கீழ் செயற்படுத்தப்படும் இறக்குமதி கட்டுப்பாடு மற்றும் அதுசார்ந்த எல்லை பாதுகாப்பு பணியகத்தினால் (EXBS நிகழ்ச்சித்திட்டம்) நன்கொடையாக 280,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான STRATLINK தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித்திட்டத்தினை முழுமையான அடிப்படை குறியீட்டுடன் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களமானது 'e-உரிமப்பத்திர' நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.