• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசாங்க செலவு மதிப்பீடுகளின் மீண்டுவரும் நிதி ஏற்பாடுகளை 6 சதவீதத்தினால் குறைத்தல்
- நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட நிதி நிலைமையின் கீழ் அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அத்தியாவசியமானதும் முன்னுரிமைப்படுத்தப்பட்டதுமான பணிகளுக்கு போதியளவு நிதி ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் 2023 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க செலவு மதிப்பீடுகளின் மீண்டுவரும் செலவின மதிப்பீடுகளிலிருந்து 5 சதவீதத்தை முடக்கிவைப்பதற்கு 2023‑01‑09 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுத் திறைசேரியினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. இதற்கிணங்க, மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது மீண்டுவரும் செலவின நிதி ஏற்பாடுகளிலிருந்து 5 சதவீத்திற்குப் பதிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசாங்க செலவு மதிப்பீடுகளின் மீண்டுவரும் செலவின நிதி ஏற்பாடுகளிலிருந்து 6 சதவீதத்தை முடக்கிவைப்பதற்கும் இதில் 1 சதவீதத்திற்கு சமமான அளவினை அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான மேலதிக நிதி ஏற்பாடாக சுகாதார அமைச்சுக்கு ஒதுக்குவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.