• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சேவைக்கான சம்பளம் செலுத்துகை
- 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் புதிய வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகளின் அமுலாக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் ஈட்டப்படும் வருமானத்தை திரட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கலாம் என்பதனால் அரசாங்கத்தின் நிதிப்பாய்ச்சல் வரையறைகளுக்குப் பொருத்தமான வகையில் சனவரி மாதத்திலிருந்து எதிர்வரும் ஒருசில மாதங்கள் அரசாங்க செலவினங்களை முகாமிக்க வேண்டியுள்ளது. அதற்கிணங்க, பதவிநிலை சாராத உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த சம்பளத்தை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தை குறித்த தினத்தின் சில தினங்களுக்குப் பின்னர் செலுத்துவதற்கும், பொது திறைசேரியினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அதன் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.