• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்
- கமத்தொழில் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2022/2023 பெரும் போகத்தில் நெல் மேலதிக விளைச்சல் நிலவுமென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கிணங்க, நெல் விவசாயிகள் அதேபோன்று நுகர்வோர் ஆகிய இருதரப்பினரையும் பாதுகாப்பதற்காக வழமையான நெல் கொள்வனவு வழிமுறைக்கு புறம்பாக அத்தகைய ஏதேனும் குறித்த நெல் தொகையினை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவையெனக் கண்டறியப்பட்டுள்ளது. நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியான நிலைமையின் கீழ் இனங்காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கைத்தரத்தை பேணுவதற்காக மேலதிக சலுகையினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில், உத்தேச நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள இரண்டு (02) மில்லியன் குடும்பங்களை தழுவும் விதத்தில் குடும்பமொன்றுக்கு மாதம் 10 கிலோகிராம் அரிசி வீதம் இரண்டு (02) மாதங்களுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்களின் பங்குபற்றலுடன் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 2022/23 பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.