• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏற்றுமதிகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள முகவராண்மையைத் தாபித்தல்
- ஒன்றுக்கொன்று இசைவாக்கமுடைய மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக தனி நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கான முன்மொழிவானது 2023 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்டது. இதற்கிணங்க, முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை என்பவற்றிற்குப் பதிலாக புதிய முகவராண்மையொன்றைத் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த முகவராண்மையை தாபிப்பதற்கான பணிகளை முகாமிப்பதற்கும் வழிகாட்டல்களைச் செய்வதற்குமாக கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.