• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிவில் விமான சேவைகள் (விமான தளத்தைப் பயன்படுத்துவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள்) ஒழுங்குவிதிகள்
- சிவில் விமான சேவைகள் அதிகாரசபையினால் இலங்கையின் விமான தளத்தை பயன்படுத்துவதற்காக அறவிடக்கூடிய கட்டணம் மற்றும் அறவிடுவதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் 117(2)(q) என்பதன் பிரகாரம் சிவில் விமான சேவைகள் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் விமான தளத்தைப் பயன்படுத்துவதற்காக அறவிடப்படும்' கட்டணங்களைத் திருத்தி அதற்குரிய ஒழுங்குவிதிகள் 2022‑10‑26 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த ஒழுங்குவிதிகளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் ஏற்புடையதாக்கிக் கொள்வதற்காக 2022‑11‑02 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது வெளியிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.