• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வரிவிதிப்பு நிறுவகத்தின் பெயரை இலங்கை பட்டயம் பெற்ற வரிவிதிப்பு நிறுவனம் என திருத்துதல்
- இலங்கை வரிவிதிப்பு நிறுவனமானது 2000 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வரிவிதிப்பு நிறுவன (கூட்டிணைத்தல்) (திருத்த) சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள நிறுவனமொன்றாகும். இந்த நிறுவனத்தினால் பாடநெறிகளை நடாத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு வரி தொடர்பான கற்கைகளை வழங்குவதுடன், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் வரி ஆலோசகர்கள், தத்துவம் பெற்ற பிரதிநிதிகள், மற்றும் தத்துவம் பெற்ற முகவர்கள் என செயற்படுவதற்கு அதிகாரங்களை வழங்கி வரிவிதிப்பு சம்பந்தமான தொழில்வாண்மையாளர்களுக்கு உறுப்பாண்மை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் பெயரை இலங்கை பட்டயம் பெற்ற வரிவிதிப்பு நிறுவகமாக திருத்தும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதான அவர்களினால் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) ஆம் ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த சட்டமூலத்தை சிபாரிசு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.