• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் இணைப்பு மற்றும் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு வரிச் சலுகை வழங்குதல்
- உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் பாதுகாப்பான வினைத்திறனான மற்றும் காலநிலைக்கு தாக்குப்பிடிக்கும் தொடர்புகளை வழங்குதல் மற்றும் கமத்தொழில் வழங்கல் சங்கிலியை பலப்படுத்தல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டு இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் அடையாளங் காணப்படும் சமூகத்தவர்களை வலுவூட்டுவதற்காக இணைப்பு மற்றும் அபிவிருத்திக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டத்தில் நாடளாவிய ரீதியில் 3,000 கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கருத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிதியை முழுமையாக கருத்திட்டத்தின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் கருத்திட்டத்திற்குரிய வரியினை செலுத்தல்களிலிருந்து விலக்களிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இக்கருத்திட்டத்தை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிப்பதற்கு தகைமையைப் பெறுவதற்கான திட்டவட்டமான கருத்திட்டமொன்றாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் மூலம் வௌிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.