• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கும் உலக பசுமை விருத்தி நிறுவனத்திற்கும் இடையில் உபசரணை நாட்டு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- ஐக்கிய நாடுகள் சபையின் றியோ +20 மாநாட்டில் அங்கத்துவ நாடுகளின் உடன்பாட்டுடன் அரசாங்கங்களுக்கிடையேயான அமைப்பொன்றாக 2012 ஆம் ஆண்டில் உலக பசுமை விருத்தி நிறுவனமானது தாபிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பசுமை விருத்தி திறமுறையினை மேம்படுத்தல், பங்குதாரர்களின் பங்குபற்றுதலுடன் பசுமை விருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குதல் போன்றவை இந்த நிறுவனம் தாபிக்கப்பட்டமைக்கான நோக்கமாகும். மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி, பசுமை நகரங்கள் மற்றும் நிலைபெறுதகு நிலத்தோற்ற அலங்காரம் (Sustainable Landscape) போன்ற பிரதான தொனிப்பொருட்களில் குறித்த நிறுவனம் இயங்கி வருகின்றது. அதற்கிணங்க, உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.