• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய விஞ்ஞான நிறுவனத்துடன் இணைந்த வளிமண்டல மற்றும் கடல்சார் விஞ்ஞான மையத்திற்கும் இலங்கையின் தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மைக்கும் (NARA) இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுதல்
- ஆராய்ச்சி பரிமாற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள், சமுத்திரம் சார்ந்த அனர்த்தங்களை முற்கூட்டியே கண்டறிதல் போன்றவற்றுக்காக இலங்கை விஞ்ஞானிகளின் ஆற்றல் விருத்தி மற்றும் மீன்வள வலயங்கள் தொடர்பான கண்டறிதல்களுக்கு பயிற்சியளித்தல் போன்ற இருதரப்பினரும் உடன்படுகின்ற விடயங்களுக்காக இந்திய விஞ்ஞான நிறுவனத்துடன் இணைந்த வளிமண்டல மற்றும் கடல்சார் விஞ்ஞான மையத்திற்கும் தேசிய நீரகவள மூலங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.