• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச வர்த்தக அலுவலகத்தை தாபித்தல்
– சர்வதேச வர்த்தக அலுவலகத்தை தாபிப்பதற்காக 2022‑10‑03 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குறித்த அலுவலகம் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுடன் ஒன்றிணைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச வர்த்தக அலுவலக சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.