• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அடுத்த 25 ஆண்டுகள்
- அடுத்த 25 ஆண்டுகளில் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியில் துறைகளில் மேம்பாட்டினை அடையும் நோக்கில் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதென மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

(I) பின்வரும் புதிய நிறுவனங்களைத் தாபித்தல் :

* வரலாற்று நிறுவகம்
* பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவகம்
* பெண்கள் மற்றும் பாலினத்திற்கான நிறுவகம்
* அரச மற்றும் பொதுக் கொள்கை பல்கலைக்கழகம்
* கமத்தொழில் தொழிநுட்ப பல்கலைக்கழகம்
* காலநிலை மாற்றம் பற்றிய பல்கலைக்கழகம்
* விளையாட்டு பல்கலைக்கழகம்

(II) பின்வரும் நோக்கங்கள் கருதி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல்:

* தேசிய மகளிர் ஆணைக்குழு சட்டம்
* பாலின சமத்துவ சட்டம்
* பெண்கள் வலுவூட்டல் சட்டம்
* சிறுவர் பராமரிப்பு சட்டம்
* காலநிலை மாற்றம் பற்றிய சட்டம்
* சமூக நீதி ஆணைக்குழு சட்டம்
* காடு வளர்ப்பு மற்றும் மரக்காப்புச் சட்டம்
* பயன்பாட்டிலுள்ள தனித்துவமான அமைவிடங்கள் சட்டம் -

மகாவலி கங்கை
சிங்கராசவனம்
சிவனொலிபாத மலைப்பகுதி / வன உச்சி
ஹோட்டன் சமவௌி
நக்கல்ஸ்
ஆதாம் பாலம்

* கடல் வளங்கள் ஆய்வு மற்றும் முகாமைத்துவத்திற்கான சட்டம் (விசேட பொருளாதார வலயத்திற்குள்)
* முத்துராஜவெல (பாதுகாப்பு) சட்டம்
* மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டம்

(III) பின்வரும் புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் :

* நகரப்புர காடுகள் 75
* குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொழும்பில் 1,996 வீடுகள்
* தேசிய இளைஞர் மேடை தொடர்பிலான கருத்திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள்