• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பலபிட்டிய ஶ்ரீ ராகுலாராம புராண விஹாரஸ்த சாமநேர அணுகுமுறை அபிவிருத்தி பிக்குமார் கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
- பலபிட்டிய ஶ்ரீ ராகுலாராம புராண விஹாரஸ்த சாமநேர அணுகுமுறை அபிவிருத்தி பிக்குமார் கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையொன்றாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அவர்களினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. உரிய அடிப்படை சட்டமூலமானது சட்டவரைநரினால் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 52(6) இன் ஏற்பாடுகளுக்கமைய குறித்த சட்டமூலத்தை சிபாரிசு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.