• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன பொருட்களின் முகாமைத்துவம் தொடர்பிலான தேசிய கொள்கைக்கு செய்யப்படும் திருத்தங்கள்
– ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக உலகம் முழுவதும் தற்போது சுமார் 350,000 இரசாயன பொருட்கள் சந்தையில் காணப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பிற்கு அமைவாக இரசாயன பொருட்களுக்கு முகங்கொடுத்தல் காரணமாக ஆண்டொன்றில் சுமார் 2 மில்லியன் பேர் மரணிக்கின்றனர். அதேபோன்று இரசாயன பொருட்களை முறையாக முகாமிக்காமை காரணமாக பல்வேறுபட்ட நோய்களுக்கு ஆளாகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இரசாயன பொருள் பாவனையின் போது சுற்றாடலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஐக்கிய நாடுகளின் 21 ஆவது நிகழ்ச்சிநிரலில்"நச்சு இரசாயன பொருட்களை சுற்றாடல் நட்புறவுமிக்கதாக முறையாக முகாமித்தல்" என்பதை உலகளாவிய ரீதியில் முன்னுரிமை கொண்டு கவனம் செலுத்தப்படவேண்டிய விடயமொன்றாக இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச சமவாயங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கு இரசாயன பொருட்களின் முகாமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தி தொடர்புபட்ட பிரதான அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் அடங்கலாக சகல தரப்பினர்களுடனும் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டுள்ளஇரசாயன பொருட்களின் முகாமைத்துவம் தொடர்பிலான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.