• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஏற்றுமதி சார்ந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திகளை உற்பத்தி செய்யும் நிலையமொன்றைத் தாபித்தல்
- அம்பாந்தோட்டைக்கு அருகாமையில் ஏற்றுமதியினை நோக்காகக் கொண்ட எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திகளை உற்பத்தி செய்யும் நிலையம் என்பவற்றைத் தாபிக்கும் உயர் தேவை நிலவுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. இந்த முதலீட்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு பல்வேறுபட்ட தர்ப்பினர்களும் வௌிநாட்டு முதலீட்டாளர்களும் அக்கறை கொண்டுள்ளனர். இதற்கிணங்க, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்றைத் தாபிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு ஆர்வ வௌிபடுத்தல் அறிவித்தலினை வௌியிடுவதற்கும் அதிலிருந்து அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்யும் முதலீ்டாளர்களிடமிருந்து விரிவான பிரேரிப்புகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.