• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையை தராளமயப்படுத்துதல் மற்றும் புதிய வருகையாளர்களை தேர்ந்தெடுத்தல்
- 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன சட்டம் மற்றும் அதற்கு இடைநேர்விளைவான திருத்தியமைக்கப்பட்ட ஏற்பாடுகளின் மூலம் உராய்வு நீக்கி எண்ணெய் கைத்தொழிலில் நுழைவதற்கு எதிர்பார்க்கும் புதிய விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பதற்கும் அதற்கு ஒருங்கிணைவாக அனுமதிபத்திரங்களை வழங்குவதற்கும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் இந்நாட்டின் உராய்வு நீக்கி எண்ணெய் சந்தை முழுமையாக திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடங்கலாக 26 உரிமப்பத்திரங்களை கொண்டுள்ள நிறுவனங்கள் உராய்வு நீக்கி எண்ணெய் கைத்தொழில் ஈடுபட்டுள்ளனர். நுகர்வோருக்கு சிறந்த போட்டிகரமான விலையில் உராய்வு நீக்கி எண்ணெயினை கொள்வனவு செய்யும் வாய்ப்பு உரிமையாகும் விதத்தில் தரத்தில் உயர்ந்த புதிய மற்றும் போட்டிகரமான உற்பத்திகளை இந்நாட்டு சந்தையில் நுழைவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கையில் உராய்வு நீக்கி எண்ணெய் சந்தைக்கு புதிய வருகையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு தகைமைகளை கோரும் விண்ணப்பங்களை அழைக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.