• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலுள்ள வசதிகளை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஆர்வ வௌிப்படுத்தல்களை கோரல்
- மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தள அமைப்பிற்கு அமைவாக விமான தொழிற்பாடு அதேபோன்று விமான தொழிற்பாடற்ற பிற பணிகளுக்குரிய வர்த்தக வாய்ப்புகளையும் நடைமுறைப்படுத்தி பல்பணி வர்த்தக நிலையமொன்றாக குறித்த விமான நிலையத்தை மாற்றும் சாத்தியம் நிலவுகின்றது. ஆதலால், அரசாங்க - தனியார் கூட்டு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலுள்ள வசதிகளையும் ஆதனங்களையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதன்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, விமான போக்குவரத்து சார்ந்த மற்றும் விமான போக்குவரத்து சாராத வர்த்தகங்களை மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்வதற்கு நேரடியான மற்றும் மறைமுகமான விமான சேவைகள் சார்ந்த தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள முதலீ்ட்டாளர்களிடமிருந்தும் திறமுறை தொழில்முயற்சியாளர்களிடமிருந்தும் ஆர்வ வௌிப்படுத்தல்களை கோருவதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.