• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
75 ஆவது சுதந்திர தின ஞாபகார்த்த விழா
- 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின ஞாபகார்த்த விழா மற்றும் அதற்கு ஒருங்கிணைவாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தந்த நிறுவனங்களினால் நிறைவேற்றப்படவேண்டிய பணிகள் உட்பட பொறுப்புக்கள் உள்ளடக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.