• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அடுத்த தசாப்தத்திற்கான தேசிய வலுசக்தி சாத்திய வளங்கள், திறமுறைகள் மற்றும் பாதை வரைபடம் பற்றிய அமைச்சரவை உபகுழு
- வலுசக்தி துறையை நிலைபேறாக அபிவிருத்தி செய்வதனை நோக்காகக் கொண்டு பின்பற்றப்படவேண்டிய கொள்கைகள் மற்றும் திறமுறைகளை இனங்கண்டு அமைச்சரவைக்கு பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கும் இந்த சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையினால் எடுக்கப்படும் தீர்மானங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் பின்னூட்டல்களைச் செய்வதற்குமாக 2022‑08‑30 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த உபகுழுவினால் உரிய தரப்பு நிறுவனங்கள், துறைசார் தொழில்சார்பாளர்கள் மற்றும் நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் சில கூட்டங்கள் நடாத்தப்பட்டதன் பின்னர் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வலுசக்தி துறைக்குரிய சிபாரிசுகள் மற்றும் குறிக்கோள்கள் உள்ளடக்கப்பட்ட பாதை வரைப்படத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.