• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட பின்வரும் ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2022‑12‑09 ஆம் திகதியிடப்பட்டதும் 2309/40 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ள, 2022 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.

* 2022‑12‑19 ஆம் திகதியிடப்பட்டதும் 2311/08 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ள, 2022 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள்.

* 2022‑12‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 2311/18 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ள, 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க கொடுப்பனவு முறைகளுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்.