• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்திற்கான திருத்தம்
- இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பான ஏற்பாடுகள் 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் 5(1) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், குறித்த ஏற்பாடுகளின் பிரகாரம் துறைமுகம் என்னும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் பிரதிநிதியொருவரை இந்தப் பணிப்பாளர் சபைக்கு நியமிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. உரிய தீர்மானங்களை எடுக்கும் போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் பிரதிநிதியொருவரும் இருப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதனால் அதற்கிணங்க நடவடிக்கை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க இலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் 5(1) ஆம் பிரிவைத் திருத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.