• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் 4 ஆவது சுழற்சி
- 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக அனைத்து உறுப்பு நாடுகளும் உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கு உட்பட்டு செயற்படல் வேண்டும். இதன் மூலம் உறுப்பு நாடுகளில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் இந்த நாடுகளில் மனித உரிமைகளுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் தேசிய மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அனைத்து உறுப்பு நாடுகளும் அதன் மீளாய்வினை 4 ஆண்டுகளுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை இதுவரைக்கும் 3 காலமுறை மீளாய்வு அமர்வுகளில் பங்குபற்றியுள்ளதுடன், அடுத்துவரும் மீளாய்வு காலவரிசை அமர்வு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ளது. 4 ஆவது காலமுறை மீளாய்வின் கீழ் சமர்ப்பிக்கப்படவுள்ள, இலங்கையின் தேசிய அறிக்கைகள் மூலம் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மீளாய்விலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான சுயமதிப்பீட்டை சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.