• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் துரித சேவை பிரிவைத் தாபித்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நகர பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களை அங்கீகரிக்கும் செயற்பாட்டினை துரிதப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தி விண்ணப்பங்களை சரிபார்க்கும் செயற்பாட்டினை மேம்படுத்தி ஒரே இடத்தில் (one-stop unit) சகல அங்கீகாரங்களையும் வழங்ககூடிய விதத்திலான பிரிவொன்றைத் தாபிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.