• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலைகளுக்கு தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதித்தல் (தரம் 6 தவிர)
- பாடசாலைகளுக்கு தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதித்தலின் (தரம் 6 தவிர) பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை மேலும் முறைப்படுத்தி இடைப்பட்ட தரங்களில் பாடசாலைகளை மாற்றுவதற்கு உண்மையாக தேவைப்படும் குழுக்களை இனங்கண்டு சகல மாணவர்களுக்கும் சாதாரணமானதும் சமமான வாய்ப்பினையும் வழங்கும் விதத்தில் புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடைமுறையிலுள்ள தரம் 1 – 5 வரை ஒரு வகுப்பில் ஆகக்கூடுதலான மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆகவும் தரம் 6 – 11 வரை ஒரு வகுப்பில் ஆகக்கூடுதலான மாணவர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் இந்த முறையில் எவ்வித மாற்றமும் இன்றி அவ்வாறே பேணுவதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.