• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர கடல்சார் நீரியல் உற்பத்திகளை பரிசோதனை செய்தல், தொற்று தடைக்காப்பு சேவை மற்றும் விலங்கின சுகாதார பாதுகாப்பு தேவைகள் தொடர்பிலான உபசரணை
- நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் குடியரசின் சுங்கத்தின் பொது நிர்வாகத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் 29 உற்பத்திகள் கடல்சார் நீரியல் உற்பத்திகளாவதோடு, மக்கள் சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த உறுபதிகளின் ஏற்றுமதியாளர்களாக செயலாற்றுகின்றனர். சீனாவுக்கு கடல்சார் நீரியல் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள கடல்சார் நீரியல் உற்பத்திகளை பரிசோதனை செய்தல், தொற்று தடைக்காப்பு சேவை மற்றும் விலங்கின சுகாதார பாதுகாப்பு தேவைகள் தொடர்பிலான உபசரணையை சீன மக்கள் குடியரசின் சுங்கத்தின் பொது நிர்வாகத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.