• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடமாடும் உபகரணங்கள் தொடர்பிலான சர்வதேச நலன்கள் பற்றிய கேப்டவுன் சமவாயத்தையும் விமான உபகரணங்களுக்கான விசேட விடயங்கள் தொடர்பிலான நடமாடும் உபகரணங்கள் குறித்த சர்வதேச நலன்கள் தொடர்பிலான சமவாயத்தின் நெறிமுறையையும் அங்கீகரித்தல்
– பிரத்தியேக சட்டங்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச நிறுவனத்தினதும் சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பினதும் அனுசரணையுடன் 2021 ஆம் ஆண்டில் நடமாடும் உபகரணங்கள் தொடர்பிலான சர்வதேச நலன்கள் பற்றிய கேப்டவுன் சமவாயம் மற்றும் விமான உபகரணங்களுக்கான விசேட விடயங்கள் தொடர்பிலான நடமாடும் உபகரணங்கள் குறித்த சர்வதேச நலன்கள் தொடர்பிலான சமவாயத்தின் நெறிமுறை என்பன செய்துகொள்ளப்பட்டுள்ளன. குறித்த சமவாயத்தை அங்கீகாரிப்பதற்கும் இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை ஆக்கும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.