• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
– 2019‑10‑29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, தயாரிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் 2019‑11‑01 ஆம் திகதியன்று அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் இது உள்வாங்கப்படவில்லை. சமகால தேவைகளுக்கு ஏற்றவாறு இலங்கை மத்திய வங்கியின் பணிகளை மிக வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப சட்டமூலத்திற்கு புதிய திருத்தங்களை உள்ளடக்கி விருத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலமானது நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.