• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய விசா வகையினை அறிமுகப்படுத்துதல்
- கொழும்பு துறைமுக நகரத்தில் தாபிக்கப்படவுள்ள சர்வதேச வர்த்தக, கப்பல் மற்றும் தொழிற்பாடு, நிதி, தகவல் தொழிநுட்பம் உட்பட சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட சேவைகளுக்காக வருகைதரவுள்ள முதலீட்டாளர்களுக்கும் ஏனைய உரிய தரப்பினர்களுக்கும் விசா வழங்குதல் மற்றும் இதற்குரிய பணிகள் என்பன குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் சிசாரிசினை அடிப்படையாகக் கொண்டு, பின்வரும் விசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* வதிவிட விசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கு "முதலீட்டாளர் விசா" என்னும் வகை.

* வேலைவாய்ப்புகள் சார்பில் "வேலைவாய்ப்பு விசா" என்னும் வகை.

* கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு "சீபிசீ வதிவிட ஆதன குத்தகை கொள்வனவாளர் விசா" என்னும் வகை.