• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவகமொன்றைத் தாபித்தல்
– தேசிய கொள்கை அமுலாக்கத்தின் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிரேட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் புரிந்துணர்வுடனான தீர்மானங்களை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருளியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான பயிற்சியினை வழங்குவது மிக முக்கியமானதாகும். இதன் பொருட்டு தேவையான வசதிகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் "இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவகம்" என்னும் நிறுவனமொன்றை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவகமொன்றைத் தாபிப்பதற்கான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.