• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகள் சம்பந்தமாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளின் போது குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகள் சார்பிலான ஒத்துழைப்பின் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பரஸ்பர நன்மைகளுக்கான எல்லை கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குதல், மனித வளங்கள் முறைமை மற்றும் தொழிநுட்பம் போன்ற துறைகளின் ஆற்றலை விருத்தி செய்வதற்கு பரஸ்பர வசதிகளை வழங்குதல், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கிடையில் பயிற்சி வசதிகளுக்கான பரிமாறல், முறையற்ற புலம்பெயர்வு, மனித கடத்தல் மற்றும் மனித வியாபாரம் போன்ற சர்வதேச குற்றங்களை தடுப்பதற்கும் தடுப்பு பட்டியலிலுள்ள பயணிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குரிய ஒத்துழைப்பின் மேம்பாடு போன்ற நோக்கங்களை அடையும் பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் குடிவரவு குடியகல்வு பணிகள் தொடர்பிலான ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் மற்றும் பலப்படுத்துதல் என்பன பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.