• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரித்தல்
- பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான ஆரம்ப சட்டமூலம் 2022‑10‑31 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனை செய்யும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த ஆரம்ப வரைவினை பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி அதன்கண்ணுள்ள விடயங்கள் சம்பந்தமாக அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதன் போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, மாண்புமிகு பிரதம அமைச்சரினால் கட்சித் தலைவர்களுடன் உரிய ஆரம்ப வரைவு சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளதோடு, அச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த இந்தக் கருத்துக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைவினை அடிப்படையாகக் கொண்டு, சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.