• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தியஸ்த (சிவில் மற்றும் வர்த்தக பிணக்குகளைத் தீர்த்தல்) சட்டமூலம்
- வர்த்தக மத்தியஸ்த நடவடிக்கைகளின் பொருட்டு நிலையமொன்றைத் தாபிப்பதற்காக 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருப்பினும் பல்வேறுபட்ட தொழிநுட்ப காரணங்கள் மற்றும் சில வரையறைகள் காரணமாக இந்த சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பணியினை நிறைவேற்றிக் கொள்வதற்கு இயலாமற் போயுள்ளது. தற்போது பிணக்குகளைத் தீப்பதற்கு தன்னார்வ மத்தியஸ்தத்தினை பெரும்பாலான நாடுகள் பின்பற்றுவதோடு, குறித்த பெரும்பாலான நாடுகள் தன்னார்வ மத்தியஸ்தம் சார்பில் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. அதேபோன்று தன்னார்வ மத்தியஸ்தமானது நியாயமான காரணங்களை குறிப்பிடாது நிராகரிக்கின்ற தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவற்றின் நீதிமன்றங்களுக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கும் இத்தகைய நாடுகள் தேவையான சட்டங்களை தயாரித்துள்ளன. குறித்த சர்வதேச போக்கின்பால் கவனம் செலுத்தி தன்னார்வ மத்தியஸ்தத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்நாட்டு சட்டமுறைமையில் புதிய சட்டங்ளை அறிமுகப்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க, 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய சட்டத்தை இல்லாதொழிப்பதற்கும் சிவில் மற்றும் வர்த்தக பிணக்குகளுக்கான தன்னார்வ மத்தியஸ்தம் தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதற்குரிய இடைநேர்விளைவான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டும் மத்தியஸ்த (சிவில் மற்றும் வர்த்தக பிணக்குகளைத் தீர்த்தல்) சட்டமூலத்தை தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.